34. சாக்கிய நாயனார்

அமைவிடம் : temple icon.thillaivaz anthanar
வரிசை எண் : 34
இறைவன்: ஏகாம்பரேஸ்வரர்
இறைவி : ஏலவார்குழலி
தலமரம் : மா
தீர்த்தம் : சிவகங்கை
குலம் : வேளாளர்
அவதாரத் தலம் : சங்கமங்கை
முக்தி தலம் : சங்கமங்கை
செய்த தொண்டு : சிவ வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : மார்கழி - பூராடம்
வரலாறு : சங்கமங்கை என்னும் ஊரில் பெளத்தர் குலத்தில் அவதாரம் செய்தார். புத்த மதத்தவரைப் போல் வேடமிட்டாலும் அகத்தே சிவனை வழிபட்டு வந்தார். கற்களையே மலராக எண்ணி சிவன் மேல் எறிந்து வழிபட்டார். சிவபெருமான் காட்சி கொடுத்து ஆட்கொண்டார். காஞ்சிபுரத்தில் இவருக்குத் தனிக் கோயில் உள்ளது
முகவரி : அருள்மிகு. ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம் – 631502 காஞ்சிபுரம் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : தொலைபேசி : 044-27222084

இருப்பிட வரைபடம்


எந்நிலையில் நின்றாலும் எக்கோலம் கொண்டாலும்
மன்னியசீர்ச் சங்கரன்தாள் மறவாமை பொருளென்றே
துன்னியவே டந்தன்னைத் துறவாதே தூயசிவம்
தன்னைமிகும் அன்பினால் மறவாமை தலைநிற்பார்.

- பெ.பு. 3646
பாடல் கேளுங்கள்
 எந்நிலையில்


Zoomable Image

நாயன்மார்கள் தலவரிசை தரிசிக்க    பெரிய வரைபடத்தில் காண்க